பெரியார் குறித்து கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவதூறு பேசியதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சீமானை கண்டித்து அவரது உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, சானத்தை கரைத்து சீமான் படத்தின் மீது ஊற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அவரது உருவப்படத்தை கிழித்து காலில் போட்டு மிதித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.