காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் போத்தனூர் வழியாக ஆறு ரயில்கள் இயக்கப்படும் என்ற தென்னக ரயில்வேயில் அறிவிப்புக்கு எதிராக வருகிற மார்ச் 7ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களும் மாட்டு வண்டியில் சென்று தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.