மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உறுதிமொழி நிகழ்ச்சி
மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் கோவை பாலக்காடு மெயின் ரோடு சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை கொண்டாடினர்.
இந்நிகழ்வில், தமிழக மக்களின் உரிமைக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்வோம் என்றும், ஒன்றுபட்டு வென்று காட்டுவோம் என அக்காட்சியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வினை 87 ஆவது வார்டு செயலாளர் ஜலில் மற்றும் பகுதி செயலாளர்கள் கல்யாணசுந்தரம் , ஷேக் மொய்தீன், ராஜேஷ் , வடிவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.