TNPSC குரூப் 4 தேர்வு கோவையில் 69, 737 பேர் தேர்வு

82பார்த்தது
தேர்வு மையத்தில் செளரிபாளையம் பகுதியை சேர்ந்த கரோலினா என்ற பெண் அவரது ஆறு மாத கைக் குழந்தையுடன் தேர்வு எழுத வருகை புரிந்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க், தனி செயலாளர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், ஆய்வக உதவியாளர் உட்பட 6, 244 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதற்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் நடைபெறும் குரூப் 4 தேர்வை 69 ஆயிரத்து 737 பேர் எழுதுகின்றனர். இதற்காக 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9: 30 மணி முதல் மதியம் 12. 30 மணி வரை நடைபெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி