கோவை: துடியலூர் அருகே பன்னிமடை பகுதி உள்ளது. இந்த பகுதியையொட்டி சில கி.மீட்டர் தூரத்தில் வனப்பகுதி உள்ள நிலையில் அங்கு யானைகள் உள்ளன. இன்று (டிச. 24) காலை பெண் யானை ஒன்று அமர்ந்த நிலையில் காணப்பட்டது. எந்தவித அசைவுமின்றி இருந்ததால் வனத்துறையினர் அருகே சென்று பார்த்த போது அது அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. யானை இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.