மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர 'சிமேட்' எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பாண்டு சிமேட் தேர்வு ஜன. 25-ல் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை என்டிஏ வெளியிட்டது. https://exams.nta.ac.in/CMAT முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.