வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பொம்மை கண்டுபிடிப்பு

65பார்த்தது
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பொம்மை கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 2800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது உடைந்த நிலையில் மண்ணாலான ஆண் உருவ பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிகை அலங்காரத்துடன் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டுள்ள நிலையில் பொம்மை காணப்படுகிறது. இங்கு சங்காலான வளையல்கள், கல் மணிகள், தங்கப் பொருட்கள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி