தமிழ்நாடு அரசு திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் திரையரங்குகளின் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்த கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக, AC அல்லாத திரையரங்குகளுக்கு 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், AC திரையரங்குகளுக்கு 4 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும் பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.