திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய அணையை கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளிக்கும் முடிவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “சீனா தற்போதுள்ள வழிகள் மூலம் கீழ் பகுதிகளில் உள்ள நாடுகளுடன் தொடர்பைத் தொடர்ந்து பராமரிக்கிறது. மேலும் ஆற்றின் மூலம் மக்களின் நலனுக்காக பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரணம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்கும்" என்றார்.