பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனாவுக்கு முதல் தங்கம்

58பார்த்தது
பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனாவுக்கு முதல் தங்கம்
2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் சீனா முதல் தங்கப் பதக்கம் வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீன வீரர்கள் வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியில் சீனா 16-12 என்ற கணக்கில் கொரியா குடியரசை வீழ்த்தியது. தென் கொரியாவின் கிம் ஜிஹியோன்-பார்க் ஹஜூன் ஜோடியை தொடக்கம் முதலே சீனாவின் ஹுவாங் யுடிங்-ஷெங் லிஹாவ் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இந்த பிரிவில் தென்கொரியா வெள்ளியும், கஜகஸ்தான் வெண்கலமும் வென்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி