நடுவில் பிறக்கும் குழந்தைகள் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஆஷ்டன் மற்றும் கிமியோம் லீ ஆகியோர் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில், "நடுவில் பிறக்கும் குழந்தை பெரும்பாலும் மூத்த மற்றும் இளையவர்களை விட அடக்கமாகவும், நேர்மையாகவும், அதிகளவில் ஒத்துழைக்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்" என கண்டறியப்பட்டுள்ளது.