18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ‘என்பிஎஸ் வாத்சல்யா’ திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், ஓய்வூதிய கணக்கில் பணத்தை சேமித்து வரலாம். 18 வயது நிரம்பியதும் அவர்கள் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்திற்கான பிரத்யேக தளத்தை நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்து வைத்தார்.