தமிழகத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் மட்டும் 55.6% அதிகரித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு 1,054 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 1,640 திருமணங்கள் நடைபெற்று இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. அதிக அளவில் குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ள 10 மாவட்டங்களில் ஆறு மேற்கு மாவட்டங்கள் ஆகும். ஈரோடு தவிர கோவை, நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது.