விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியோ லட்சுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைந்து குழந்தை உள்ளே விழுந்துள்ளது. மீட்கப்பட்ட குழந்தையின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.