தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகம் வந்து முதல்வரை சந்திப்பேன் என தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "விஜய் போன்றோர் அறையில் இருந்து அறைகூவல் விடுவதை எங்கள் முதல்வர் Left Handஇல் டீல் செய்வார். மடப்புரம் இளைஞர் மரணம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்தார்" என்றார்.