மேட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினால் இன்று (ஜூன் 12) திறந்து வைக்கப்பட்டது. டெல்டா பாசன வசதிக்காக, 17.15 லட்சம் ஏக்கர் நிலங்கள் பலன்பெற நீர் திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மாலைக்குள் படிப்படியாக நீர் திறப்பு 10,000 கன அடியாக நீர்திறப்பு உயரும். நீர்திறப்புக்கு பின்னர் மலர்தூவி மரியாதை செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.