சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.4) தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவிலேயே முதல் முறையாக கால நிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்" என பெருமிதம் கொண்டார்.