தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், “விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், 1000 இடங்களில் ‘முதலமைச்சர் உழவர் நல சேவை மையம்’ அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். மேலும், “தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.