முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வருகிற ஜூலை 15ஆம் தேதி மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர். இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது