பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

64பார்த்தது
பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு
கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடிக்கு மேல் உள்ளதால், 2024 - 2025 ஆம் ஆண்டில் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இன்று முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி