பக்ரீத் திருநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த வாழ்த்து செய்தியில், தியாகத்தையும், பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, அவர்களின் பொருளாதார உரிமைகளுக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் சகோதர உணர்வோடு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.