சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வராக கருணாநிதி பொறுப்பில் இருந்தபோது, அருந்ததியினர் சமூகத்துக்கு 3% உள் ஒதுக்கீடு கொண்டு வரும் பரிந்துரை குழு தலைவராக அவர் பணியாற்றி இருந்தார். அவரது மறைவு கருத்தியலில் ஈடு செய்ய இயலாதது என முதல்வர் வேதனைப்பட்டுள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகவும் ஜனார்த்தனம் பொறுப்பு வகித்துள்ளார்.