சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7, 2023 அன்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17, 2023 அன்றும் நடைபெறும். தேர்தல்
முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. சத்தீஸ்கரில் தற்போது
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.