“தீபாவளி கொண்டாட மாட்டோம்.. பொங்கல் மட்டும் தான்”
தீபாவளி பண்டிகை இன்று (அக்.31) நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பகிர்ந்து மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாம்பட்டி கிராமத்தில் 3 தலைமுறையாகத் தீபாவளி கொண்டாட்டத்தை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து முதியவர் கூறுகையில், “பாட்டன் பூட்டன் காலத்திலிருந்தே தீபாவளி கொண்டாடுவது இல்லை. ஏற்றத் தாழ்வு இல்லா பொங்கல் திருநாளை மட்டுமே கொண்டாடுவோம்” என பெருமிதம் தெரிவித்தார். நன்றி: சன் நியூஸ்