சென்னை: மகளுக்கு பாலியல் தொல்லை.. தந்தை கைது
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (43). கொத்தனார். இவர் தனது 13 வயது மகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அவரது மனைவி, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 17) புகார் அளித்தார். அதன்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது தந்தை தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ், வெங்கடேசனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதுபற்றி அறிந்த 9 வயது சிறுவனின் தாய், திருமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து, 9 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 16 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து 16 வயது சிறுவனை போக்சோவில் கைது செய்தனர். இதன்பிறகு அந்தச் சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.