தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாளை வெப்பநிலை இயல்பை விட 2 -3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக காலை 11 முதல் 3 மணி வரை வெயில் கொளுத்தி எடுக்கும் என்பதால், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது. மேலும், மோர், ஜூஸ், இளநீர் போன்ற குளிர்பானங்களை அதிகமாக அருந்தவும்.