சென்னை: மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(38). கூலி தொழிலாளியான இவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல் நேற்றிரவும் குடித்து விட்டு வந்த ராஜசேகரை மனைவி கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.