தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம்

76பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம்
பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் வரும் 13ஆம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளும், நியாய விலை கடைகளில் பொருள் பெற இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்றும் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி