பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய வழக்கில், ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சேனலின் நிறுவனர் ரெட் பிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் கேட்டிருந்தார். அதனை விசாரித்த நீதிபதி, "வெளியே யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது. ரெட் பிக்ஸ் சேனலை மூட வேண்டும்" என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.