சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர்
விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.
கடந்த சனிக்கிழமை அத்திப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்த வடு இன்னும் மாறாத நிலையில், மேலும் ஒரு விபத்து நடந்திருப்பது வேதனை அளிக்கிறது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்ய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.