குத்தகை எடுத்த நிலத்தை கேட்டு ஆளுங்கட்சி எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என குத்தகை எடுத்தவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் பால்துரை என்பவர் குத்தகைக்கு நிலம் எடுத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் ஆதரவாளர்கள் எனக் கூறி சிலர் நிலத்தை கேட்பதாக, அவர் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று 30 பேர் ஆளுங்கட்சி எனக் கூறி ஜேசிபியுடன் வந்து, இடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் ஷட்டரை இடித்துத்துடன் கொலை மிரட்டல் விடுத்ததாக பால்துரையின் மகன் வீடியோ வெளியிட்டுள்ளார்.