சென்னை, கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சங்கீதா, 43. நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டாமல் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்துபோது, வீட்டில் பொருட்கள் கலைந்து கிடந்தன. பீரோவை திறந்து அதிலிருந்த 3 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து, கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.