கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 14) முதல் 16ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று (மார்ச் 14) முதல் மார்ச் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். மார்ச் 18ஆம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.