கடந்த ஓராண்டில் மட்டும் சென்னையில் உள்ள இரு அரசு மருத்துவமனைகளில் 6, 000 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக ஒ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகள் குறைந்திருக்கும் எனவும், மாறாக தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், நாய் மற்றும் மாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தலை போக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.