கொருக்குப்பேட்டை, கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது பேரன் மோகன், வேலைக்குச் சரியாக செல்லாமல், அவரது நண்பர்களுடன் மது அருந்தி சுற்றித் திரிந்துள்ளார். கோவிந்தம்மாள், பேரன் மோகன் மற்றும் அவரது நண்பர்களைக் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த மோகனின் நண்பர்கள், அரிபாபு, சதீஷ்குமார், பிரேம்குமார், சூர்யா ஆகிய நால்வரும், கடந்த 8ஆம் தேதி இரவு, கோவிந்தம்மாள் வீட்டிற்குச் சென்று அவதூறாகப் பேசி தாக்கிவிட்டுத் தப்பினர்.
இதுகுறித்து விசாரிக்கும் ஆர்.கே. நகர் போலீசார், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கொருக்குப்பேட்டை, பெரியார் சாலையைச் சேர்ந்த சதீஷ்குமார், பிரேம்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவான இருவரையும் தேடிவருகின்றனர்.