வடசென்னையில் அணிவகுத்து நிற்கும் லாரிகள்

60பார்த்தது
வடசென்னையில் அணிவகுத்து நிற்கும் லாரிகள்
காசிமேடு, சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் கையாளப்படுவதில் ஏற்படும் காலதாமதத்தால், சாலையில் 30 கி. மீ. , துாரத்திற்கு கன்டெய்னர் லாரிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

சென்னை துறைமுகத்தை பொறுத்தவரை, சி. சி. டி. எல். , மற்றும் சி. ஐ. டி. பி. எல். , தனியார் நிறுவனங்களின் கன்டெய்னர் முனையங்கள் செயல்படுகின்றன.

இங்கிருந்து, ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன.

கன்டெய்னர் முனையங்களை பொறுத்தவரை, ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கிரேன் ஆப்பரேட்டர்கள் இருக்க வேண்டும்.

இதில், சி. ஐ. டி. பி. எல். , எனும் சென்னை பன்னாட்டு பெட்டக முனையத்தில் கன்டெய்னர்கள் 'ஷிப்ட்' செய்யும் கிரேன் ஆப்பரேட்டர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி