ஆடிப்பெருக்கை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில், சென்னை-திருச்சி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூர்-நாகர்கோவிலுக்கு நாளை இரவு 10. 45க்கும், தாம்பரம்-திருச்சிக்கு நாளை இரவு 11 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நாளை முதல் 2 நாள்களுக்கு வார விடுமுறை என்பதால் நெரிசலை தவிர்ப்பதற்காக, முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.