சென்னை: பிரியாணிக்கு காசு கொடுக்காமல் தாக்குதல்; போலீசார் விசாரணை

85பார்த்தது
சென்னை: பிரியாணிக்கு காசு கொடுக்காமல் தாக்குதல்; போலீசார் விசாரணை
சென்னை அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது நவ்ஷாத். இவர் ஜாம்பஜார் பகுதியில் பாஸ்புட் கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவரது கடைக்கு வந்த பிரசன்னா உள்பட 3 பேர் பிரியாணி வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குரிய பணத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் பணத்தை கேட்ட முகமது நவ்ஷாத்தை பிரசன்னா உள்ளிட்ட 3 பேரும் தாக்கி விட்டு தப்பி விட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. பிரசன்னா உள்ளிட்டோர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த முகமது நவ்ஷாத் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாங்கிய பிரியாணிக்கு பணம் கேட்ட கடை உரிமையாளரை தாக்கிவிட்டு சென்றவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடை உரிமையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி