சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர். நகரில், மதுக்கடைகள் காலை திறப்பதற்கு முன் பெண் ஒருவர் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கொடுங்கையூர், எழில் நகரைச் சேர்ந்த துளசி, 40 என்பவர், மதுபானக் கடைகள் திறப்பதற்கு முன் காலையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துளசியைக் கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் 2000 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.