சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹6, 760க்கும், சவரனுக்கு ₹54, 080க்கும் விற்பனையாகிறது. அதேவேளை, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ₹99க்கு விற்பனையாகிறது.