மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்வது திமுகவின் பழக்கம்: தமிழிசை

58பார்த்தது
மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்வது திமுகவின் பழக்கம்: தமிழிசை
பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்கள் தொடரும். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் எப்போதும் இந்த தவறை தான் செய்வார். எதிரணியில் இருந்து கொண்டு, தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்க விடாமல் துரோகம் செய்து கொண்டிருப்பார் தனது சுயநலத்திற்காக. அதே மாதிரி இந்தமுறையும் செய்துக் கொண்டு இருக்கிறார். நான் எதையும் எதிர்பார்த்து செய்பவள் அல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளராக, சாமானிய தொண்டராக டில்லி செல்கிறேன் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் நான் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. கட்சி கொடுக்கும் அங்கீகாரம் தான் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கிறேன். நான் எப்போதும் சொல்வது போல் ஆண்டவனிடம் ஆண்டுக் கொண்டிருப்பவர்களிடமும் நான் விட்டு விடுகிறேன் அவ்வளவு தான். அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்து இருந்தால் வெற்றி பெறும் என்று சொன்ன கணக்கு வேறுவேறு மாதிரியாக போய் கொண்டு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்திருந்தால் தோற்றுப் போய்விடும் என்று சொன்ன நிலையில், பாஜகவுடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்பதனை ஒரு கட்சி தொண்டனாக கூறியுள்ளேன். அதேநேரத்தில், பாஜக அதிக வாக்குகள் பெற்றிருப்பதை நான் மகிழ்ச்சியாக பார்க்கிறேன்.

தொடர்புடைய செய்தி