சென்னை: தங்கம் விலை உயர்வு

79பார்த்தது
சென்னை: தங்கம் விலை உயர்வு
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த ஜன. , 08ம் தேதி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. 7,225-க்கும், ஒரு சவரன் ரூ. 57,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, ரூ. 58,080-க்கும், ஒரு கிராம் ரூ. 7,260-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 200 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை 58 ஆயிரம் ரூபாயை தொட்டது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி