சென்னை: மீண்டும் தலைதூக்கியுள்ள பைக் சாகசம்

51பார்த்தது
சென்னை: மீண்டும் தலைதூக்கியுள்ள பைக் சாகசம்
சென்னையில் மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது இளைஞர்களின் ஆபத்தான பைக் ரேஸ் கலாச்சாரம். சென்ற ஆண்டுகளில் சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்கினர். ஆனால், தற்போது நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் இளைஞர்களின் ஆபத்தான பைக் சாகசம் அதிகரித்து வருகிறது.

ஆனால் சமீப நாட்களாக குறிப்பிட்ட ஒரு கும்பல் சென்னையின் முக்கிய சாலைகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராம் ரீசில் பகிரும் கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.

அதுவும் குறிப்பாக ராப் பாடகர் அசல் கோளாறு பாடல் வரியில் வரும் முடிஞ்சா எங்களை கூண்டுல நிப்பாட்டு என்னும் பாடல் வரியை சவால் விடும் விதமாக ரீல்ஸ்களில் பகிர்வது வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் instagram-ல் TEAM 05 என்ற பெயர் கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ப்போரை கதிகலங்க வைக்கும் வகையில் பைக் ரேஸ் மட்டும் பைக் சாகசங்களில் ஈடுபடும் வீடியோக்களை தொடர்ச்சியாக ரீல்ஸ்களாக பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி