மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை வாட்ஸ் அப் வழியாக பெற்றோருக்கு தெரியப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இதுவரை 1. 02 கோடி செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பள்ளிக் கல்வித்துறை எஞ்சியுள்ள பெற்றோரின் செல்போன் எண்கள் பள்ளிகள் திறக்கும் முன்பாக சரிபார்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.