காய்ச்சல் காரணமாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் மேனகா (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை எனக்கூறி காவலரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான உறவினர்கள் மற்றும் காவலர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலாவியத்து. அவர் 4 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.