வேளச்சேரியைச் சேர்ந்த 30 வயது பெண்; ஐ.டி. ஊழியர். கடந்த 9ம் தேதி, பணி முடிந்து வேளச்சேரி, திருவீதியம்மன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது, எதிரே போதையில் வந்த வாலிபர், பெண்ணின் உடலை தொட்டு சில்மிஷம் செய்தார்.
பெண் கூச்சலிட, பொதுமக்கள் அங்கு கூடுவதற்குள், அந்த நபர் தப்பிச் சென்றார். வேளச்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். பல்லாவரம், பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார், 27, என தெரிந்தது. பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், நேற்று, பிரவீன்குமாரை கைது செய்தனர்.