வேளச்சேரி மயானம் மூடல்: ஏன் தெரியுமா?

67பார்த்தது
வேளச்சேரி மயானம் மூடல்: ஏன் தெரியுமா?
சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 172வது வார்டுக்குட்பட்ட வேளச்சேரி இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

இதனால் இன்று முதல் 25ம்தேதி வரை 20 நாட்கள் இந்த மயான பூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது. எனவே, வேளச்சேரி இந்து மயானபூமியில் எரிவாயு தகனமேடையில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் ஆலந்தூர் மண்டலம், வார்டு-163க்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மற்றும் அடையாறு மண்டலம், 178வது வார்டுக்குட்பட்ட வேளச்சேரி பாரதி நகர் மயானபூமியை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி