பாலவாக்கம் கடலில் குளித்த இருவர் மாயம்..!

64பார்த்தது
பாலவாக்கம் கடலில் குளித்த இருவர் மாயம்..!
1: சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (20). கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் காரில் நீலாங்கரை அடுத்த அக்கறை கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு, பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி பிரகாஷ் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதைப் பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி பிரகாஷை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதேபோல் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (24), தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றார். பின்னர் அனைவரும் கடலுக்குள் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென ராட்சத அலை சக்திவேலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இவர்களது குடும்பத்தினர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கடலுக்குள் மாயமான இருவரையும் மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி