சென்னை: நகை கடை உரிமையாளரை கொலை செய்ய திட்டம்: 3பேர் கைது

67பார்த்தது
சென்னை: நகை கடை உரிமையாளரை கொலை செய்ய திட்டம்: 3பேர் கைது
தென்சென்னை பகுதியில் நகை கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்ய திட்டம் போட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தென்சென்னை பகுதியில் சுற்றி திரிந்த மூன்று பேரை தெற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் சிபி சக்ரவர்த்தி தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் நகை கடை வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரை பணத்திற்காக கடத்தி கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை திட்டத்தை தடுத்த தெற்கு மண்டல இணை ஆணையாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி