கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து சிவனடியார் பலி

80பார்த்தது
கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து சிவனடியார் பலி
கோபுரத்தை சுத்தம் செய்த போது தவறி விழுந்த சிவனடியார் பலியானார். திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் சுத்தம் செய்வதற்காக 10 சிவனடியார்கள் பணி செய்து வந்தனர். கொட்டிவாக்கம், சுவாமிநாதன் நகரைச் சேர்ந்த பழனி(44) என்பவர் கோபுரம் ஏறி சுத்தம் செய்யும்போது தவறி கீழே விழுந்துள்ளார். தலையில் அடிபட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைப்பு சென்று சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி